இந்தியாவுக்கு 50ஆவது பதக்கம்: உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற பூஜா சிங்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 19 வயதான இந்திய வீராங்கனை பூஜா சிங் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டி உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் (19 வயது) வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 50 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான உயரம் தாண்டுதலில் 19 வயதான இந்திய தடகள வீராங்கனை பூஜா சிங் 1.84 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் வீராங்கனை சயஃபில்லேவா பார்னோக்ஹோன் 1.87 மீட்டர் உயரம் தாண்டி தங்கமும் கஜகஸ்தான் வீராங்கனை கிறிஸ்டினா ஓவ்சின்னிகோவா 1.87 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றார்கள்.
இந்தியாவுக்கு இத்துடன் 50 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 5 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே நீடிக்கிறது.
ஆசிய விளையாட்டில் 143 தங்கம், 253 பதக்க எண்ணிக்கையுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் அசைக்க முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Asian Games 2026: Pooja Singh Wins Bronze For India In Women's High Jump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.