கவனம் பெறும் மகேஷ்வரியின் இசை ஆல்பம்..! மோகன்லால் வாழ்த்து!
நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மகேஷ்வரியின் இசை ஆல்பம் குறித்து...
நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான மகேஷ்வரி சாணக்கியன் நடித்துள்ள ’கிறுக்குச் சிறுக்கி’ என்ற இசை ஆல்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இசை ஆல்பத்தை வெளியிட்ட மலையாள நடிகர் மோகன்லால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நடிகை மகேஷ்வரி, “இந்த பிரபஞ்சமே வாழ்த்துகிறது” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகப் புகழ்பெற்ற மகேஷ்வரி சாணக்கியன் சென்னை 28 -2, பியார் பிரேம் காதல், ரைட்டர், டான், விகரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் சாரங் தியாகு இயக்கத்தில் ’கிறுக்குச் சிறுக்கி’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் மோகன்லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் பாடலைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோகன்லாலின் வாழ்த்துக்குப் பதிலளித்த மகேஷ்வரி, “இந்தப் பிரபஞ்சமே வாழ்த்துகிற போது வேற என்ன வேண்டும் எனக்கு! அதுமாதிரியான வாழ்த்துதான் மோகன்லால் சாரின் வாழ்த்து. வேறென்ன வேண்டும் எனக்கு..!” என நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.
VJ Maheswari Music Video Kirukku Sirukki trending on social media
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.