முதல்முறை.... ஹிப்-ஹாப் திறமைகளை ஊக்குவிக்கும் ராப் ரியாலிட்டி போட்டி!
ஹிப்-ஹாப் திறமைகளை ஊக்குவிக்கும் தீக்குரல் நிகழ்ச்சி.
தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளை ஊக்குவிக்கும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சி ஜீ5 தமிழ் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
அறிவு, யோகி மற்றும் ஹான் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ஜீ மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருப்பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் சவால்கள், தீவிரமான போட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் பங்கேற்பு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தனித்துவம், பாடல் வரிகளின் ஆற்றல் மற்றும் உண்மையான கதைசொல்லல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
‘தீக்குரல்’ நிகழ்ச்சி இன்று (நவ. 5) முதல் தமிழ் ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.
போட்டியாளர்கள், அவர்களின் தனிப்பட்ட கதைகள் மற்றும் இசை அடையாளங்களை அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான சைஃபர் (Cypher) நிகழ்ச்சியுடன் இந்தப் போட்டி தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் போட்டியாளர்கள் தங்களது படைப்பாற்றல், கதைசொல்லும் திறன் மற்றும் மேடை ஆளுமையை வெளிப்படுத்தும் சவால்களை எதிர்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.