ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 வசூல் இவ்வளவா?
மீசைய முறுக்கு - 2 வசூல் குறித்து...
ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அப்படத்தைத் தொடர்ந்தே, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்தார்.
தற்போது, நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (செப். 25) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜென்ஸி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படம் மூன்று நாள் வசூலாக ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆதியின் திரைப்படம் மிக விரைவாகவே ரூ. 50 கோடி வசூலைப் பெற்றிருக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பதால் ஹிப்ஹாப் ஆதியின் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
The box office collection for Hip Hop Adhi's Meesaya Murukku 2 has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.