தமிழ்ப்படம் - 3 படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ்ப்படம் - 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...
இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகும் தமிழ்ப்படம் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். முதல் பாகத்தில் தமிழ் சினிமாவில் நடக்கும் அசட்டுதனமான லாஜிக் அற்ற விஷயங்களைத் தாக்கி நகைச்சுவையான திரைப்படத்தைக் கொடுத்தார்.
அடுத்தாக, தமிழ்ப்படம் - 2லும் அரசியல் கலந்த அதே பாணி திரைப்படத்தை இயக்கினார். இரண்டும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றன. இரண்டிலும் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து கலக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக இயக்குநர் சிஎஸ் அமுதன் கூறியுள்ளார். இதிலும் நடிகர் சிவாதான் நாயகனாக நடிக்கிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.
இப்பாகம் ஏலியன்கள் கலந்த கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.