FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட் படத்தின் போஸ்டர் வெளியீடு

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

11 நவம்பர் 2026, 12:47 pm
பகிர்:

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஹாரர் த்ரில்லர் வகையிலான இத்திரைப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

கேரளத்திலிருந்து தனது தாயுடன் சென்னை வரும் இளைஞர் ஒருவர் குடியேறும் புதிய வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அதன் பின்னணி என்ன? அந்த மர்மங்களில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தனர் என்பதை பயம் கலந்த த்ரில்லர் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் அபய் சங்கர்.

Advertisement

Advertisement

இத்திரைப்படத்தில் நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான நடிகை கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரசாந்த் பிரணவம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஐயப்பன் நாயர் எம்.எஸ். கவனிக்கிறார். புராஜெக்ட் டிசைனராக ஜாக்கி ஜான்சன், விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு தீபு சந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஜனவரி 2027-ல் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.