அவள் தர்காவுக்கு... நான் கோயிலுக்கு! 5 வது திருமணநாளைக் கொண்டாடும் ஜோடி!
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் முதல் நாளைப்போல காதல் இருப்பதாக நடிகை ஷபானாவின் கணவர் தெரிவித்துள்ளது குறித்து...
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் முதல் நாளைப்போல காதல் இருப்பதாக சின்ன திரை நடிகை ஷபானாவின் கணவரும் நடிகருமான ஆர்யன் தெரிவித்துள்ளார்.
5 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஆர்யன் பதிவிட்டுள்ளதாவது:
''ஐந்து ஆண்டுகள்… ஆனால் காதல் மட்டும் இன்னும் முதல் நாளைப் போலவே!
அவளுடைய பிறந்தநாளுக்கு நான் அவளை தர்காவிற்கு அழைத்துச் செல்கிறேன்… என் பிறந்தநாளுக்கு அவள் என்னைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறாள்… இதைவிட அழகான வாழ்க்கை வேறென்ன இருக்க முடியும்? இனிய 5 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள், என்னுறவே!'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷபானா. இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்திருந்தார்.
இவர் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்திருந்தார். ஷபானா - ஆர்யன் திருமணம் 2021 நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்றது.
தற்போது 5 ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் இவர்களுக்கு சின்ன திரை பிரலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.