5 நாள் சீன் படத்தின் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சீன் படத்தின் வசூல் விவரம் குறித்து..
நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் வசூல் விவரத்தை, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் சீன் திரைப்படம் வெளியானது.
Advertisement
Advertisement
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றிப் படமானது.
இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 5 வது நாள் வசூலாக உலக அளவில் ரூ. 205 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.