FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறிய படங்களுக்கும் வாய்ப்பு... மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த திரைப்படத் தொழிலாளர் சங்கம்!

அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு வைத்துள்ள கோரிக்கை குறித்து...

பைர், ராமாயணா படத்தின் போஸ்டர்கள் - படங்கள்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ், வினோத் கப்ரி
பகிர்:

இயக்குநர் வினோத் கப்ரியின் பைர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும் திரையரங்குகள் கிடைக்காதது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த விவாகரத்தில் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் வினோத் கப்ரிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இயக்குநர் வினோத் கப்ரியின் பைர் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வயதான தம்பதிகள் பற்றிய ஃபீல்குட் படமாக உருவாகியுள்ளது.

ராமாயணா படத்தின் வெளியீட்டினால் இந்தப் படத்தின் காட்சிகள் 400லிருந்து 80ஆகக் குறைந்துள்ளது. இதனால் இயக்குநரும் பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் வினோத் கப்ரிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறிய படங்கள், பெரிய கனவு: அவர்களுக்கும் திரைகளை ஒதுக்குங்கள், நியாயமான வாய்ப்பை வழங்குக!

வினோத் கப்ரியா இயக்கிய பைர் படம் வெறுமனே ரூ. 2.5 கோடியால் எடுக்கப்பட்டது. 80 திரைகளில் இருந்து 400 திரைகளாக பார்வையாளர்களின் அன்பினால் அதிகரிக்கப்பட்டது. பெரிய படம் வெளியானதும் அதன் 75 சதவிகித காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கப்ரி புகார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெரிய படத்தை எதிர்க்கவில்லை. வணிகத்துக்கு அவை நல்லது. ஆனால், சிறிய படங்கள்தான் எதிர்காலம். எல்லா பெரிய பெயர்களும் சிறியவற்றில் இருந்தே தொடங்குகின்றது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

✅ இந்திய திரைப்படங்களுக்கு நியாயமான திரைகள் ஒதுக்கீட்டுக் கொள்கை வேண்டும்

✅ பைர் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதுக்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்

✅ பைர் படத்துக்கு முடிந்தளவு அதிக காட்சிகள், திரைகள் வேண்டும்

✅ தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் எனப் பதிவிடப்பட்டது.

summary

All India cini Workers Union seeks probe after Pyre loses 75% screens amid Ramayana release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.