FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெக்லஸில் குரான் வசனங்கள்... தீபாவளி கொண்டாட்டத்தினால் கரீனா கபூருக்குச் சிக்கல்!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் குறித்து...

பாலிவுட் நடிகை கரீனா கபூர் - படங்கள்: இன்ஸ்டா / கரீனா கபூர்
பகிர்:

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது அணிந்த நெக்லஸினால் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார்.

கரீனா கபூர் அணிந்திருந்த நெக்லஸில் குரான் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், அந்தப் புகைப்படங்களை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதால், நடிகை கரீனா கபூர், ஸ்டைலிஸ்ட் ரேகா கபூருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகை கரீனா கபூர் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் டிசைனர் புனித் பாலானா செய்த காஃப்டன் உடையும் அதற்கேற்ற நிறத்தில் டர்பனும் அணிந்திருந்தார்.

இத்துடன் 200 ஆண்டுகள் பழமையான போபால் நவாப்பிற்குச் சொந்தமான கல்கியையும் அணிந்துள்ளார். அத்துடன் போபால் பேகத்துக்குச் சொந்தமான 30 கேரட் எம்ரால்ட் நெக்லஸும் அணிந்திருந்தார். அந்த நெக்லஸில் ஆயத்துல் குர்சி (Ayat-ul-Kursi) என்ற குரான் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

இவை போபால் ராஜ குடும்பத்தின் சொத்துகள். இவை சயிஃப் அலி கான் குடும்பத்தினர் மூலமாக கரீனா கபூருக்குக் கிடைத்துள்ளது. அவரது பாட்டி சஜித் சுல்தான், போபால் நவாப்பின் கடைசி மகள் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புகைப்படங்களை நீக்கி கரீனா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் சட்ட ரீதியான சிக்கலை சந்திக்க நேரிடும் என அப்பாஸ் ஹபீஸ் வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கரீனா கபூர், ரேகா கபூர் பதில் அளிக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் டாய்ரா படம் வெளியானது. இதன் ஓடிடி நவ.13ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.

summary

Kareena Kapoor Khan gets legal notice for wearing pendant with Quranic verse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.