FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீண்டும் ஹாரர் கதையில் கங்கனா ரணாவத்..! படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள புதிய திரைப்படம் குறித்து...

கங்கனா ரணாவத் - படம்: எக்ஸ் / கங்கனா ரணாவத்
பகிர்:

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த கங்கனா ரணாவத் தற்போது நாடாளுமன்ற எம்பியாக பதவி வகிக்கிறார். இருந்தும் அவரது திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறையாமல் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் படத்துக்கு ’ஸ்கேரி பிக்சர்’ ( Scary Picture) எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்தப் படத்தை இயக்குநரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஃபிளையிங் ஃபாக்ஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோவை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். அதில் கொடுங்கனவு விரைவில் அம்பலமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளராக ராணா டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு இணைந்துள்ளார். அதனால், ராணா இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்த கங்கனா ரணாவத், “பயமாக இருக்கும். ஆனால், சுவாரசியமாகவும் இருக்கும்” எனக் கூறியுள்ளார். இந்தப் படம் தேதி குறிப்பிடாமல் அடுத்தாண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் கங்கனா இரண்டு ஹாரர் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதலாவதாக 2009ல் ராஜ்: தி மிஸ்டரி கன்டினிவ்ஸ், 2023ல் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக கங்கனா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் மனோஜ் தபாடியா இயக்கத்தில் பாரத பாக்ய வித்தாத்தா என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய படமாக உருவாகியிருந்தது.

அடுத்ததாக கங்கனா ரணாவத் நடித்து முடித்துள்ள குயின் படத்தின் இரண்டாம் பாகமன ’சர்கிள்’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அதில் நடிகர் மாதவன் உடன் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

Kangana Ranaut starrer Scary Picture gets first poster and lands producer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.