FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கஸ்தூரி ராஜா நடிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட மம்மூட்டி!

ஹபீபி திரைப்படம் குறித்து மம்மூட்டி பேச்சு...

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி.
பகிர்:

நடிகர் மம்மூட்டி இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் நடிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகக் கூறியுள்ளார்.

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஓ.ம் திரைப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, “நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா பெரிய இயக்குநர். எதார்த்தமாக அவர் நடித்த ஹபீபி என்கிற திரைப்படத்தைக் கண்டேன். தமிழ் சினிமாவில் அபூர்வமாக எடுக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கைத் திரைப்படமான அதில் கஸ்தூரி ராஜாவின் நடிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இவருக்கு நடிக்கவும் வருகிறது என்பது வியப்பாக இருந்தது. தனுஷ் இவரோட மகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய விருது வாங்கச் சென்றபோது தனுஷிடம் அவரது அப்பா சிறப்பாக நடித்திருந்ததைச் சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார்" எனக் கூறினார்.

இதனைக் கண்ட ஹபீபி இயக்குநர் மீரா கதிரவன், “உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், மகத்தான கலைஞர், இன்னொருவரின் திறமையை அடையாளம் கண்டு, மற்றொரு திரைப்படத்தின் மேடையில் மனம் திறந்து பாராட்டுவது, கலையின் மீதான பேரன்பும் பெருந்தன்மையுமன்றி வேறென்ன?

மம்முட்டி சாரின் வார்த்தைகள் எங்கள் எளிய முயற்சிக்குக் கிடைத்த பெருவெளிச்சம். இன்னும் தொலைதூரக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையும் உத்வேகமும்! பேரன்பின் கலைஞன் மம்முக்காவுக்கு நெஞ்சார்ந்த நன்றி! இந்த நெகிழ்வான தருணத்தை அழகாகப் பதிவுசெய்து பகிர்ந்துவரும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Mammootty has stated that he was impressed by director Kasthuri Raja's acting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.