FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

ஓம் திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த தனுஷ்.

நடிகர் தனுஷ் - (கோப்புப்படம்)
பகிர்:

ஓம் திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்” திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், முதல்வர் விஜய்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Dhanush has thanked Chief Minister Vijay for granting permission for the 6:00 AM screening of the film 'Om'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.