நீயும், உன் கூட்டமும்... முடிந்தால் அடித்துப்பார்! டிடிஎஃப் வாசனுக்கு சவால் விட்ட ஜேசன்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு மட்டுமின்றி அவரின் ரசிகர்களிடமும் ஜேசன் சவால் விடுத்துள்ளது குறித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு மட்டுமின்றி அவரின் ரசிகர்களிடமும் ஜேசன் சவால் விடுத்துள்ளார்.
போட்டியில் நல்ல ஆட்டக்காரன் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும், தமிழ்நாட்டில் 10 கோடி மக்கள் இருப்பதாகவும் அதில் நீயும் உன் கூட்டமும் சேர்ந்து என்னை ஜெயித்துப் பாருங்கள் என்று ஜேசன் சவால் விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஆட்டத்தை சுவாரசியமாக்கும் முனைப்பில் டிடிஎஃப் வாசனிடம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் போட்டியில் குறிப்பிட்டு ஜேசன் சவால் விடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பில்டப் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதற்கேற்றவாறே போட்டிகளும் வைக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது நாளான இன்று கடவுள் பாதி மிருகம் பாதி போட்டி வைக்கப்பட்டது.
அதாவது தலையில் கிரீடத்துடன் மேடையில் அமரும் போட்டியாளரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தாராளமாக எந்தவித ஒளிவு மறைவுமின்றி கேட்கலாம். அதற்கு மேடையில் அமர்ந்திருக்கும் போட்டியாளர் சிரித்துக்கொண்டே சீராக பதில் அளிக்க வேண்டும் என்பதே போட்டி.
இப்போட்டியில் கிரீடத்துடன் மேடையில் அமர்ந்த டிடிஎஃப் வாசனிடம் ஜேசன் சில கேள்விகளை எழுப்பினார். அது போட்டியை மீறி தனிப்பட்ட முறையிலான தாக்குதலாகவும் அமைந்ததாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
வார இறுதி நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு அதிக கைதட்டல்கள் கிடைப்பதால், அதனை நம்பியே டிடிஎஃப் வாசன் விளையாடி வருவதாகவும், போட்டியில் உண்மையான ஆட்டக்காரன் மட்டுமே ஜெயிக்க முடியும் என ஜேசன் கூறினார்.
நான் உண்மையான ஆட்டக்காரர் என்றும் என் உழைப்பால் பிக் பாஸில் வெற்றி பெறுவேன் என டிடிஎஃப் வாசன் பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் 10 கோடி மக்கள் இருக்கின்றனர். நீயும் உன் கூட்டத்தையும் கண்டு துளி கூட எனக்கு பயம் இல்லை. முடிந்தால் என்னை அடித்துப்பார் என டிடிஎஃப் வாசனிடம் சவால் விடுக்கிறார் ஜேசன்.
டிடிஎஃப் வாசனுக்கு விடுத்த இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக அவரின் ரசிகர்கள் பலர் முன்னோட்ட விடியோவில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.