முகப்பு

ரஷ்மிகாவின் மைசா படத்துக்காக 30 ஆண்டுகள் பழமையான விஜயசாந்தியின் பாடல் மறு உருவாக்கம்!

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள மைசா படத்தின் புதிய பாடல் குறித்து...

ரஷ்மிகாவின் மைசா படத்துக்காக 30 ஆண்டுகள் பழமையான விஜயசாந்தியின் பாடல் மறு உருவாக்கம்!
விஜயசாந்தி, ரஷ்மிகா மந்தனா - படங்கள்: ஐஎம்டிபி, ஆதித்யா மியூசிக்
பகிர்:

நாராயண ராவ் இயக்கத்தில் விஜயசாந்தி நடிப்பில் 1997ல் வெளியான படத்தில் இருந்து ‘ஒசே ராமுலம்மா...’ எனும் பாடலை ரஷ்மிகா மந்தனாவின் மைசா படத்துக்காக மறு உருவாக்கம் செய்துள்ளார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பாடலை பாடிய அசல் கலைஞர்கள் வரவேற்கப்பட்டு, புதிய வெர்ஷனை பாடியுள்ளார்கள். இதற்காக பாடலாசிரியர் சுட்டால அசோக் தேஜ், பாடகர் வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ் வருகைத் தந்தார்கள்.

இந்தப் பாடலை வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ் இசையமைத்து பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்மிகா நடித்துள்ள மைசா என்ற படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படம் வருகிற நவ. 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் பாடல் குறித்து ரஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது:

எனது படத்துக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பாடலை மறு உருவாக்கம் செய்கிறார்கள் என்பதை அறிந்ததும், கூடுதல் பொறுப்புணர்வு வந்ததை உணர்ந்தேன். அசலை எங்களால் நிகர்செய்ய முடியாது. ஆனால், அதற்கு நியாயம் செய்ய முயற்சிப்போம்.

இது விஜயசாந்தி மேடம்க்கு எங்களது சிறிய புகழஞ்சலி. புதிய பாடலுக்காக அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என நினைக்கிறேன். ஒசே ராமுலம்மா வரலாற்றைப் படைத்தது. எங்களது மறு ஆக்கத்திற்கும் அதேபோல் அன்பு கிடைக்குமென நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

summary

Vijaya Shanthi Iconic 'Osey Ramulamma' song recreated for Rashmika Mandanna's Mysaa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.