முகப்பு

தலை வணங்குகிறேன்... நடிகர் அஜித்தைப் பாராட்டிய நாக சைதன்யா!

அஜித் குமார் குறித்து நாக சைதன்யா பேச்சு...

54 வினாடிகள் முன்பு
தலை வணங்குகிறேன்... நடிகர் அஜித்தைப் பாராட்டிய நாக சைதன்யா!
நடிகர்கள் அஜித் குமார், நாக சைதன்யா.
பகிர்:

நடிகர் நாக சைதன்யா நடிகர் அஜித்குமாரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. நடிகர் நாகர்ஜூனாவின் மகனான இவர் கவனித்தக்க வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இறுதியாக, இவர் நடித்த கஸ்டடி, தண்டெல் ஆகியவை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை.

நடிகை சமந்தாவைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்ததாக, விஸ்வகர்மா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் நாக சைதன்யா, “நடிகர் அஜித் குமார் தன் நடிப்புத்துறையில் நிறைய சாதனைகளைச் செய்து உச்சத்தில் இருக்கும் போதே தனக்குப் பிடித்தமான கார் பந்தயங்களில் புதிதாக சில விஷயங்களை ஆரம்பித்து தன் கனவை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரை அதிகம் மதிக்கிறேன். தலை வணங்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Naga Chaitanya has spoken in praise of actor Ajith Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.