முகப்பு

பிக் பாஸ் 10: 75 நாள் விளையாடியதை கேக் வெட்டி கொண்டாடிய முகேஷின் பெற்றோர்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முகேஷை அவரின் பெற்றோர் கேக் வெட்டி உற்சாகமாக வரவேற்றது குறித்து...

பிக் பாஸ் 10: 75 நாள் விளையாடியதை கேக் வெட்டி கொண்டாடிய முகேஷின் பெற்றோர்!
பெற்றோருடன் முகேஷ் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முகேஷை அவரின் பெற்றோர் கேக் வெட்டி உற்சாகமாக வரவேற்றனர். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நடனமாடி முகேஷை வரவேற்றது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் டிடிஎஃப் வாசன், ஜேசன், பிரித்வி, முகேஷ், ஷாதிகா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களித்தனர்.

இதில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை ஷாதிகா மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

Advertisement

இதில் முகேஷ் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்தாலும் டிடிஎஃப் வாசனின் எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் மூலம் மீண்டும் போட்டியில் தொடர்ந்தார். ஆனால் தற்போது மீண்டும் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.

முகேஷ் வெளியேறும்போது அவரை பாராட்டிய பிக் பாஸ், திரைத்துறையில் இளம் ஹீரோவாகி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என வாழ்த்தி அனுப்பியிருந்தார்.

நடுசென்டர் இணையத் தொடரின் புரமோஷனுக்கு பிக் பாஸிற்கு வந்ததைப்போல, அடுத்தமுறை ஹீரோவாகி என் பட புரமோஷனுக்காக பிக் பாஸ் வருவேன் என முகேஷும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் முடித்து திரும்பிய மகன் முகேஷை அவரின் பெற்றோர் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 75 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை கொண்டாடும் வகையில் நண்பர்களை அழைத்து நடனமாடி மகிழ்ச்சியாக முகேஷை வரவேற்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

summary

Bigg boss 10 Bigg Boss 10: Mukesh's parents celebrate his 75-day journey in the game by cutting a cake!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.