முகப்பு

பிறந்த நாள் வாழ்த்துகள் காதலரே... நாக சைதன்யாவை வாழ்த்திய சோபிதா!

நடிகர் நாக சைந்தன்யாவின் பிறந்த நாள்...

பிறந்த நாள் வாழ்த்துகள் காதலரே... நாக சைதன்யாவை வாழ்த்திய சோபிதா!
நாக சைதன்யாவுடன் சோபிதா
பகிர்:

நடிகர் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி சோபிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. நடிகர் நாகர்ஜூனாவின் மகனான இவர் கவனித்தக்க வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இறுதியாக, இவர் நடித்த கஸ்டடி, தண்டெல் ஆகியவை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை.

நடிகை சமந்தாவைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்ததாக, விஸ்வகர்மா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். தற்போது, நடிகையும் நாக சைதன்யாவின் மனைவியுமான சோபிதா துலிபாலா, “பிறந்த நாள் வாழ்த்துகள், காதலரே...” எனப் பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை சோபிதா தமிழில் நடித்த வேட்டுவம் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

On the occasion of actor Naga Chaitanya's birthday, his wife Sobhita has extended her wishes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.