ஆஸ்கர் தகுதிப் பட்டியலுக்குத் தேர்வான கோந்தல்!
ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் கோந்தல்...

ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்பட்ட இந்தியத் திரைப்படமான கோந்தல் தகுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில், இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான மராத்திய திரைப்படமான கோந்தல் கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றது.
மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, இந்தப் படம் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதைப் பெற்றது.
மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 99 ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க “கோந்தல்” திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான தகுதிப்பட்டியலில் கோந்தல் தேர்வாகியுள்ளது. இதனால், இப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.