முகப்பு

தொடர் அழைப்புகள்... ஆபிஸர் ஆன் டூட்டியால் வந்த சிக்கல்!

ஆபிஸர் ஆன் டூட்டி திரைப்படத்தால் எழுந்த பிரச்னை குறித்து...

28 வினாடிகள் முன்பு
தொடர் அழைப்புகள்... ஆபிஸர் ஆன் டூட்டியால் வந்த சிக்கல்!
பகிர்:

நடிகர் குஞ்சக்கோ போபன் நடிப்பில் வெளியான ஆபிஸர் ஆன் டூட்டி திரைப்படம் புதிய சிக்கலைச் சந்தித்துள்ளது.

இயக்குநர் ஷாகி கபிர் எழுத்தில் இயக்குநர் ஜிது அஷ்ரஃப் இயக்கத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், பிரியா மணி, ஜெகதீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் ஆபிஸர் ஆன் டூட்டி.

காவல்துறை அதிகாரியான குஞ்சக்கோ தொடர் கொலைகளைச் செய்யும் குழுவினரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும் வழக்குகளில் காவல்துறையினர் சந்திக்கும் மனநெருக்கடிகளுடன் கூடிய கதையாக எழுதியிருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, நெட்பிளிக்ஸில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. ஆனால், இப்படத்தின் காட்சி ஒன்றில் செல்போன் எண் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தனர். அந்த எண்ணைக் கண்ட ரசிகர்கள் அதனைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எண்ணின் சொந்தக்காரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நாளும் ஏகப்பட்ட அழைப்புகளுடன் கொலை மிரட்டல்களும் வருவதால் தன் நிம்மதி போனதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ஆபிஸர் ஆன் டூட்டி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின் பரகாட் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்களைத் திரையில் காண்பிக்கலாம். ஆனால், அதனை உறுதி செய்யாமல் யாரோ ஒருவரின் எண்ணை பயன்பாட்டில் இருக்கிறதா என அறியாமல் இப்படி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The film Officer on Duty, starring actor Kunchacko Boban, has run into fresh trouble.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.