இப்படி பண்றீங்களே... ஜெனிலியா முகத்தில் மலர்களை வீசிய ரசிகர்!
நடிகை ஜெனிலியாவின் முகத்தில் வேகமாக மலர்கள் எறியப்பட்டது குறித்து...

நடிகை ஜெனிலியா மீது மலர்கள் எறியப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நடிகை ஜெனிலியா தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெரிய புகழைப் பெற்றார்.
தொடர்ந்து, ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ரியான், ரகாயல் எனும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Advertisement
Advertisement
தற்போது, ஜெனிலியா நடிப்பில் உருவான கன்மாஸ்டர் ஜி9 திரைப்படம் நாளை (நவ. 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அதற்கான சாலை ஊர்வலம் சென்ற போது ஜெனிலியா மீது ரசிகர்கள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். கைகளை அசைத்தபடி வந்த போது திடீரென ஜெனிலியாவின் முகத்தில் வேகமாக மலர்கள் எறியப்பட்டன. இது, தற்செயலாக நடந்தாலும் முகத்தில் பட்டதால் அதிர்ச்சியில் ஜெனிலியா உடனடியாகக் காருக்குள் சென்றுவிட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.