மின் மயானத்துக்குள்ளிருந்து அலறல் சப்தம்! வைரலான விடியோ உண்மையா?
மின் மயானத்துக்குள்ளிருந்து அலறல் சப்தம் வந்தது தொடர்பான விடியோ பற்றி..

மின் மயானத்துக்குள் அனுப்பப்பட்டு, எரியூட்டப்பட்ட பெண் அலறி சப்தமிடுவது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மின் மயானத்தின் வெளியே உறவினர்கள் கண்ணீருடன் நின்றிருக்க, உடல் உள்ளே அனுப்பப்பட்ட சில வினாடிகளில் எரியூட்டப்படுகிறது. அப்போது, உள்ளிருந்து அலறல் சப்தம் கேட்கிறது. இதனால் வெளியே இருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மின் மயான கதவை திறக்கச் சொல்கிறார்கள்.
ஆனால், மின் மயான கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே அசைவற்ற உடல் எரிந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் மீண்டும் கதவுகளை மூடும்படி வெளியே நிற்பவர்கள் கையசைக்க, கதவுகள் மூடப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த விடியோ வெளியாகி, உயிரோடு இருக்கும் நபர் எரிக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் குபர் கஞ்ச் பகுதியில் நடந்ததாகவும் சில வலைத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த சம்பவம் உண்மையானது என்றோ, உள்ளே இருந்த பெண் உயிரோடு இருந்தார் என்பது போன்ற தகவல்களோ உறுதி செய்யப்படவில்லை.
மேலும், இது குறித்து காவல்துறை, மருத்துவமனை அல்லது மின் மயானம் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அது மட்டுமல்லாமல், மின் மயானத்துக்குள் உடலை எரியூட்டும்போது, இதுபோன்ற சப்தங்கள் இயற்கையாகவே எழும்பும் என்றும், உள்ளே இருக்கும் காற்று, அதிகப்படியான வெப்பம் காரணமாக வேகத்துடன் வெளியேறும்போது இதுபோன்ற சப்தம் கேட்கக்கூடும் என்றும் சில கருத்துகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சம்பவம் நடந்த இடமும் வெளி வராததால் இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.