அரசன் 8 நிமிட கிளிம்ஸுக்கு இசையமைக்கும் அனிருத்! எப்போது வெளியீடு?
அரசன் கிளிம்ஸ் விடியோ குறித்து...

அரசன் திரைப்படத்தின் 8 நிமிட கிளிம்ஸ் விடியோ தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக லிடியன் நாதஸ்வரம் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இயக்குநர் வெற்றி மாறனுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தயாரிப்பாளர் தாணுவிடம், அரசன் இசையமைப்பாளர் மாறிவிட்டாரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு தாணு, “ஊகத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது” எனக் கூறினார். இதன் மூலம் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளர் என உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அரசன் திரைப்படத்தின் 8 நிமிட கிளிம்ஸ் விடியோ வருகிற டிச. 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, தீபாவளிக்கு வெளியான அரசன் புரோமோ கடுமையான எதிர்வினைகளைப் பெற்றதால் இம்முறை அப்பிரச்னை வரக்கூடாது என அனிருத்தே முழுமையாக இந்த கிளிம்ஸுக்கு இசையமைக்க உள்ளாராம்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிச. 12 ஆம் தேதி தர்மன் திரைப்படத்தின் டீசரும் வெளியாகலாம் என்பதால் அப்படத்திற்கும் இசைப்பணிகளைச் செய்து வருகிறாராம்!