அரசன் இசையமைப்பாளர் யார்? தயாரிப்பாளர் தாணு பதில்!
அரசன் இசையமைப்பாளர் யார் என்கிற கேள்விக்கு தயாரிப்பாளர் பதில்...
அரசன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த கேள்விக்கு கலைப்புலி தாணு பதிலளித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகவும் அவருக்குப் பதிலாக லிடியன் நாதஸ்வரம் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இயக்குநர் வெற்றி மாறனுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தயாரிப்பாளர் தாணுவிடம், அரசன் இசையமைப்பாளர் மாறிவிட்டாரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு தாணு, “ஊகத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது” எனக் கூறினார். இதன் மூலம் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளர் என உறுதியாகியுள்ளது.
மேலும், தீபாவளியை முன்னிட்டு வெளியான அரசன் திரைப்படத்தின் ‘ஃபயர்’ புரோமோ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் யூடியூபில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக கலைப்புலி எஸ். தாணு குறிப்பிட்டுள்ளார்.
Kalaipuli Thanu has responded to a question regarding the music director for the film Arasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.