முகப்பு

மறுவெளியீடாகும் ரஜினியின் முரட்டுக்காளை!

மறுவெளியீடாகும் முரட்டுக்காளை...

54 வினாடிகள் முன்பு
மறுவெளியீடாகும் ரஜினியின் முரட்டுக்காளை!
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் முரட்டுக்காளை திரைப்படம் மறுவெளியீடாகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் எஸ்பி முத்துராமன் கூட்டணியில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ரஜினி திரைப்படங்களில் இப்படத்திற்கும் தனி இடமுண்டு. இதில், இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் பெரிதாகப் பேசப்பட்டன.

நடிகர்கள் ரதி அக்னிகோத்ரி, ஜெய் சங்கர், சுருளி ராஜன் என பல பிரபலங்கள் நடித்த இப்படம் வணிக ரீதியாகவும் அசத்தியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிச. 11 ஆம் தேதி முரட்டுக்காளை திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் 4கே தொழில்நுட்பத்தில் தர மெறுகூட்டல் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Rajinikanth's film Murattu Kaalai is being re-released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.