முகப்பு

ஆசை அத்தான்... பாக்கெட் நாவல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்தின் முதல் பாடல் குறித்து...

44 வினாடிகள் முன்பு
ஆசை அத்தான்... பாக்கெட் நாவல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!
மாளவிகா மோகனன் - படம்: எக்ஸ் / டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட்
பகிர்:

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்தின் முதல் பாடலான ‘ஆசை அத்தான்’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது வென்ற தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் நடித்துள்ளார்கள்.

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Advertisement

Advertisement

படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. நடிகை மாளவிகா மோகனன் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் விடியோ வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வரும் டிச. 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

summary

Pocket Novel The Film Aasa Aththan – First single from December 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.