முகப்பு

பாடகராகும் அபிஷன் ஜீவிந்! பிக்காசோ பட முதல் பாடல் அறிவிப்பு!

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள “பிக்காசோ” படத்தின் முதல் பாடல் அறிவிப்பு...

31 வினாடிகள் முன்பு
பாடகராகும் அபிஷன் ஜீவிந்! பிக்காசோ பட முதல் பாடல் அறிவிப்பு!
பிக்காசோ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு...
பகிர்:

சிவ ராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள “பிக்காசோ” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இவர் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்த “வித் லவ்” படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகினார்.

இந்த நிலையில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் “பிக்காசோ” திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை, அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், லியான் ஜேம்ஸ் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் “ஹக்குனாமாடாட்டா” எனும் முதல் பாடல் வரும் நவ. 27 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு இன்று (நவ. 25) அறிவித்துள்ளது.

இத்துடன், இப்படத்தின் நாயகனான அபிஷன் ஜீவிந் இப்பாடலை பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இயக்குநராகவும், நடிகராகவும் அசத்திய அபிஷன், பாடகராக அறிமுகமாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர்கள் யோகலட்சுமி, கானா வினோத் மற்றும் ஷிவாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The release of the first song from the film “Picasso,” starring Shiva Rajkumar and Abhishen Jeevinth, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.