FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘டூரிஸ்ட் ஃபேமலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்!

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது பற்றி...

அபிஷன் ஜீவிந்த் - Instagram
பகிர்:

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் சமீபத்தில் வெளியான வித் லவ் திரைப்படத்தில் கதாநாயகனாக அசத்தினார்.

தற்போது இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் பிக்காசோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அபிஷன் ஜீவிந்த், ’அதிகாரப்பூர்வமாக பெண் குழந்தைக்கு அப்பாவாகிவிட்டேன்’ (Officially a Girl Dad) என்று பதிவிட்டுள்ளார்.

அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படமாக ’டூரிஸ்ட் ஃபேமலி’யின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் தனது நீண்ட நாள் தோழியான அகிலாவை காதலிப்பதாக அனைவரின் முன்னிலையிலும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர். கடந்த வாரம் முதலாமாண்டு திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

summary

Director Abishan Jeevinth has become the father of a baby girl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments