FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

27 வயதில் காலமான மலையாள இயக்குநர்!

மலையாள இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் (27 வயது) இறப்பு குறித்து...

17 அக்டோபர் 2026, 5:37 pm IST
பெல்ராஜ் கலாரிக்கல் - படம்: எக்ஸ்/ ஜியோ ஹாட்ஸ்டார்
பகிர்:

மலையாள இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் (27 வயது) கொச்சி ஹோட்டல் அறையில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட தகவலில் மாரடைப்பு எனக் கூறப்படுகிறது.

நிழல், மதுரம், தாகினி ஆகிய படங்களுக்கு துணை இயக்குநராக இருந்த பெல்ராஜ் கலாரிக்கல் கப்பி ஸ்குவாட் என்ற இணையத் தொடர் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

இந்தத் தொடர் சில நாள்களுக்கு முன்புதான் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், துயரச் செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

ஆறாண்டுகளாக காதலித்து வந்த இவர் கடந்த செப்டம்பரில்தான் திருமணம் செய்தார். இந்த நிலையில் அவர் ஹோட்டர் அறையில் இறந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கப்பி ஸ்குவாட் என்ற இணையத் தொடரில் ரினோஷ் ஜியார்ஜ், அனாகா அஜித், தியா தீபன், ஜோயல் ஜோசப் என்ற நான்கு இளைஞர்களின் தொழில் முனைவோர் ஆகும் கனவைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் செய்தி அவரது நண்பர்கள் மற்றும் திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் இந்த இறப்பு குறித்து பதிவிட்டுள்ளது.

summary

Kappi Squad director Belraj Kalarickal passes away at age 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments