முகப்பு

இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவின் இணை இயக்குநர்

இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவின் இணை இயக்குநர் பற்றி...

21 நவம்பர் 2026, 6:39 pm
இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவின் இணை இயக்குநர்
வெங்கட் பிரபுவின் இணை இயக்குநர்
பகிர்:

இயக்குநர் வெங்கட்பிரபுவிடடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஜெய் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு - தமிழில் உருவாகும் இந்த புதிய காதல் திரைப்படத்தில் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் தெலுங்கில் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Karthik Jai, who worked as an associate director under director Venkat Prabhu, is making his directorial debut with a romantic film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.