முகப்பு

மேயாத மான் - 2 திரைப்படத்தை இயக்கும் ரத்னகுமார்!

உருவாகும் மேயாத மான் - 2 திரைப்படம்...

மேயாத மான் - 2 திரைப்படத்தை இயக்கும் ரத்னகுமார்!
பகிர்:

இயக்குநர் ரத்னகுமார் மேயாத மான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

மேயாத மான், குலு குலு போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ரத்னகுமார்.

இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதி கூடுதலாக கவனிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இறுதியாக, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 29 என்கிற திரைப்படத்தை இயக்கினார். திரையரங்குகளில் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் ஓடிடி வெளியீட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார் மேயாத மான் - 2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் மற்றும் கார்த்திகேயனின் ஸ்டோன் பென்ஞ் தயாரிக்க உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஷா, விவேக் பிரசன்னா ஆகியோர் இப்படத்திலும் நடிக்கின்றனர்.

Director Rathna Kumar is directing the second installment of Meyaadha Maan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.