முகப்பு

வீரரைப் போற்று... வேட்ட சாமி இரண்டாவது பாடல்!

வேட்ட சாமி பாடல் வெளியானது...

54 வினாடிகள் முன்பு
வீரரைப் போற்று... வேட்ட சாமி இரண்டாவது பாடல்!
பகிர்:

வேட்ட சாமி திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’வேட்ட சாமி’. இப்படத்தை, இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார். மதுரை பின்னணியில் கோவில் சாமியாடுதலை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடலை வெளியிட்டுள்ளனர். ஜெகன் கவிராஜ் எழுதிய இப்பாடலை புஷ்பவன் குப்புசாமி பாடியுள்ளார்.

The second song from the film 'Vetta Saami' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.