FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேசாததைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்... டோரதியைப் பாராட்டிய சூர்யா!

டோரதி திரைப்படத்தைப் பாராட்டிய சூர்யா...

நடிகர்கள் சூர்யா, ரிஷிகாந்த், சனந்த்.
பகிர்:

நடிகர் சூர்யா டோரதி திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் சூர்யா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டோரதி - பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Suriya has posted in praise of the movie Dorothy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments