பிக் பாஸ் 10 சிறந்த போட்டியாளர் ஷாதிகா! முகேஷால் உடைகிறார்? நடிகை அக்ஷிதா பேச்சு!
நடிகை ஷாதிகா குறித்து பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்துள்ள அக்ஷிதா பேசியது தொடர்பாக...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் மிகச்சிறந்த போட்டியாளராக நடிகை ஷாதிகா உள்ளதாக வைல்டு கார்டு மூலம் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகை அக்ஷிதா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸில் முதல் வாரத்தின் ஆட்டத்தைப் பார்த்து, இந்த சீசனின் வெற்றியாளர் ஷாதிகாதான் என நினைத்திருந்ததாகவும், ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் அவர் முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. 4 வது வாரத்தின் முடிவில் அஸ்மிதாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த சவின்யாவும் தன்யாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த ஜாவேத்தும் வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
லட்சுமி பிரியாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த குமரன், தாமாகவே போட்டியில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டு பிக் பாஸ் போட்டியில் தொடர்கிறார்.
லட்சுமி பிரியாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த குமரன், தாமாகவே போட்டியில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டு பிக் பாஸ் போட்டியில் தொடர்கிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 3 பேர் இந்த வாரம் நுழைந்துள்ளனர். பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், சின்ன திரை நடிகை அக்ஷிதா ஆகியோருடன் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரீஷ்மா ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசன், அக்ஷிதா, கரீஷ்மா ஆகியோருக்கு டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் அனுப்பியிருந்தார். அதனை சிறப்பாக செய்து முடித்தனர். மூவருமே ஜேசன் ஆட்டத்தைக் குறிவைத்து தங்கள் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே நடிகை ஷாதிகா குறித்து பேசிய அக்ஷிதா, பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் ஷாதிகாவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் காணாமல்போய்விட்டதாகவும் கூறினார்.
முதல் வாரத்தின் தலைமைப் பொறுப்பை சிறப்பாக செய்த நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் சரிந்துவிட்டதாகவும், அதனை சரி செய்துகொண்டால், இந்த சீசனின் மிகச்சிறந்த போட்டியாளராக ஷாதிகா வருவார் எனக் குறிப்பிட்டார்.
இதுமட்டுமின்றி ஷாதிகாவின் முதல் வார ஆட்டத்தைப் பார்த்ததுமே, இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என முடிவு செய்திருந்ததாகவும் கூறினார்.
வெளியே இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள அக்ஷிதா கூறியவற்றை ஷாதிகா தனக்குள் எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தடம் மாற்றாமல் விளையாட வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
bigg boss 10 tamil update Akshitha saying shathiga is best player inside the house but mukesh spoiled
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.