FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினியின் 3 மணிநேர நேர்காணல்! எப்போது வெளியீடு?

ரஜினிகாந்த்தின் நீண்ட நேர்காணல் குறித்து...

நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் நீண்ட நேர்காணல் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முத்துவேல் பாண்டியனின் ஆக்‌ஷனில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இருப்பதால் சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

ஆனாலும் இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழாவைப் பெரிய அளவில் நடத்தவில்லை. அனிருத்தே சிறிய மேடையில் அனைத்து பாடல்களையும் பாடி வெளியிட்டார். இதனால், ரஜினியின் சுவாரஸ்யமான பேச்சு இருக்காது என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இக்குறையைத் தீர்க்கவும் புரமோஷனுக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நேர்காணலை அளித்துள்ளார். இதனை இயக்குநர் நெல்சன் ஒருங்கிணைத்துள்ளாராம். இந்த நேர்காணல் சன் தொலைக்காட்சியில் வருகிற அக். 11 ஆம் தேதி மாலை 6.30 - 9.30 மணிவரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

A long interview with actor Rajinikanth is ready for release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments