மீண்டும் தாயாகும் கியாரா அத்வானி!
கியாரா அத்வானி கர்ப்பத்தை அறிவித்துள்ளார்...
நடிகை கியாரா அத்வானி தான் மீண்டும் தாயாக உள்ள செய்தியை அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி, மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவர், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய கியாரா அத்வானிக்கு 2025 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து, நடிகர் யஷ்ஷுடன் டாக்ஸிக் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் கடுமையான எதிர்வினைகளைப் பெற்று தோல்விப்படமானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக கியாரா அத்வானி அறிவித்துள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர இணை என்பதால் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Actress Kiara Advani has announced the news that she is expecting a baby again.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.