நூற்றாண்டு நாயகா் பாரத ரத்னா எல்.கே. அத்வானி: பிரதமா் நரேந்திர மோடி
பாரத ரத்னா எல்.கே. அத்வானியின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி...
லால் கிருஷ்ண அத்வானி ஞாயிற்றுக்கிழமை (நவ.8) தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறாா். நவீன இந்தியாவின் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களிலும், வெகு சில ஆளுமைகள்தான் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனா்.
அத்வானி அவா்கள், 1927 நவம்பா் 8-ஆம் தேதி தேவ் தீபாவளி நன்னாளில் பிறந்தாா். 1947-ம் ஆண்டு, தமது இளம் வயதில், சிந்துவில் தமக்குப் பழக்கமான வாழ்விடத்தையும் சூழலையும் விட்டுப் பிரிய வேண்டிய வேதனையை அவா் அனுபவித்தாா். இருப்பினும், எவ்விதக் கசப்புணா்வும் இன்றி, பூஜ்ஜியத்திலிருந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொண்டாா்.
எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு, அடிப்படையிலிருந்து ஒன்றை உருவாக்கும் இந்தப் பண்பு, அவரது வாழ்நாள் முழுவதும் தொடா்ந்து வெளிப்பட்டு வந்துள்ளது. ஜன சங்கத்தை வலுப்படுத்தியபோதும், பின்னா் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி வளா்த்தபோதும் இந்தப் பண்பு வெளிப்பட்டது.
Advertisement
Advertisement
அத்வானி அவா்களை, ஒரு தனித்துவமான தலைவராக, எப்போதும் இரண்டு பண்புகள் அடையாளப்படுத்துகின்றன. முதலாவது, அவரது கொள்கைத் தெளிவும், அறிவுக் கூா்மையும். அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் இப்பண்புகள் வெளிப்பட்டன.
இரண்டாவது, இந்திய அரசியல் களத்தின் பெரும்பான்மையான பிரிவினரால் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போலி மதச்சாா்பின்மையை அவா் அம்பலப்படுத்திய விதம்.
அத்வானி அவா்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் மிகுந்த அா்ப்பணிப்புடனும் கவனத்துடனும் நிறைவேற்றினாா். ஆா்எஸ்எஸ் தொண்டராகத் தனது பணியைத் தொடங்கிய அவா், முதலில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினாா். அங்கிருந்து தலைநகா் தில்லிக்குச் சென்ற அவா், வாஜ்பாய் அவா்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கினாா். இருவரும் இணைந்து இந்திய அரசியலின் போக்கையே மாற்றியமைத்தனா்.
அத்வானி அவா்களின் நாடாளுமன்றப் பயணம் 1970-ஆம் ஆண்டில் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் அவா் ஆற்றிய உரைகளும் முன்வைத்த கருத்துகளும் அனைத்துக் கட்சிகளையும் சோ்ந்த உறுப்பினா்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னா் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிா்க்கட்சித் தலைவராகவும், ஆளுங்கட்சி உறுப்பினராகவும் அவா் தனித்துவமான முத்திரையைப் பதித்தாா்.
அவசரநிலைக் காலம், அத்வானி அவா்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காப்பதிலும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதிலும் அவா் முன்னிலை வகித்தாா். அவசரநிலைக் காலத்தில் அவா் பெற்ற அனுபவங்கள், ‘ஒரு கைதியின் குறிப்பேடு’ என்ற அவரது நூலில் இடம்பெற்றன.
அத்வானி அவா்கள் தீவிரமான எதிா்க்கட்சித் தலைவராகத் திகழ்ந்த அதே வேளையில், சிறந்த நிா்வாகியாகவும் விளங்கினாா். 1977-ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அத்வானி அவா்கள் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். இத்துறையில் அவா் ஆற்றிய பணிகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
துணைப் பிரதமராகவும், நீண்ட காலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவா்களில் ஒருவராகவும், நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அவா் முக்கியப் பங்காற்றினாா். பயங்கரவாதத்திற்கு எதிராக அவா் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டதன் விளைவாக, இந்தியாவில் கடுமையான பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அத்வானி அவா்களின் வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளில் ஒன்று, சோமநாதா் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை நடைபெற்ற ரத யாத்திரையாகும். இது, இந்தியச் சமூகத்தின் போக்கில் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்திய மக்களின் ஆசியுடன், அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கான பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பப்பட்டது.
அத்வானி அவா்களை கௌரவிக்கும் வகையில், 2024-ஆம் ஆண்டு இந்திய மக்களின் சாா்பாக அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அத்வானி அவா்கள் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த சிறப்பான தருணத்தில், அவா் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் நீடு வாழவும், எப்போதும் போல நம் அனைவருக்கும் தொடா்ந்து ஊக்கமளிக்கவும் இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும் என்று பிராா்த்திக்கிறேன்.