FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்முறையாக ரேம்ப் வாக்..! அனுபவம் பகிர்ந்த சாரா அர்ஜுன்!

நடிகை சாரா அர்ஜுன் முதல்முறையாக ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்தது குறித்து...

38 வினாடிகள் முன்பு
ஃபேஷன் ஷோவில் சாரா அர்ஜுன் - படம்: பிடிஐ
பகிர்:

நடிகை சாரா அர்ஜுன் (21 வயது) முதல்முறையாக ஃபேஷன் ஷோவில் பங்கேற்று ரேம்ப் வாக் செய்து பலரையும் வியக்க வைத்துள்ளார். தில்லியில் நடைபெற்றுவரும் லேக்மி ஃபேஷன் வீக்கில் கலந்துகொண்டு அசத்தினார்.

தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, அண்மையில் வெளியாகி வசூல் வேட்டையை நிகழ்த்திய துரந்தர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருக்கும் ஆச்சரியம் அளித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எஃப்டிசிஐ (பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா) நடத்திய லேக்மி ஃபேஷன் வீக்கில் சாரா அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார். இதில் ஆடை வடிவமைப்பாளர் அனுஸ்ரீ ரெட்டியின் ஆடைகளை அணிந்து சாரா அர்ஜுன் வலம் வந்தார்.

தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த பேஷன் காலாவின் நான்காவது நாளில் அனுஸ்ரீ ரெட்டியின் ‘மாயா’ என்ற ஆடையை சாரா அர்ஜுன் அணிந்திருந்தார்.

லெஹெங்கா பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த நீல நிற ஆடையில் வெள்ளை நிற பூக்களால் அழகாக சித்திரப்பின்னல் செய்யப்பட்டிருந்தது. பெபுலம் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆடையில் சாரா அர்ஜுன் அழகாக இருந்தார். இது குறித்து சாரா அர்ஜுன் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

என்னுடைய முதல் எண்ணமே ‘நான் இதற்கு தயாரா?’ என்றுதான் இருந்தது. பிறகு நான் இதற்கு தயாராக இருக்கிறேன் என உணர்ந்தேன். பிறகு இது ஓர் ஆர்வமாக மாறியது.

பேஷன் ஷோ மேடையில் நடப்பது, அங்கிருப்பது என இதெல்லாமே ஒரு புதுவிதமான மனக்கிளர்ச்சி. அனுஸ்ரீ எப்போதும் என்னிடம் ‘சாரா, நீ நிச்சயமாக மகிழ்வாய்’ எனக் கூறிக்கொண்டே இருப்பார். ஏனெனில், இது என்னுடைய முதல் முறை. அங்கு போகும்வரை எனக்கே இது எப்படி இருக்குமெனத் தெரியாது. ஆனால், பிடித்திருந்தது.

நானும் இந்த ரேம்ப் வாக்கில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்தான் என்று இப்போது உணர்கிறேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். இந்த ஃபேஷன் ஷோ நாளையுடன் (அக்.18) முடிவுக்கு வருகிறது.

summary

'Dhurandhar' star Sara Arjun makes ramp debut at Lakme Fashion Week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments