FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது: தேவாவுக்கு சூர்யா இரங்கல்!

உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது என மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்தது குறித்து...

18 அக்டோபர் 2026, 11:06 am IST
பகிர்:

உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது என மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா(75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

உங்கள் இசையும், அன்பும், உங்களுடன் பழகிய நினைவுகளும் என்றும் என் மனதை விட்டு நீங்காது தேவா சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Suriya has expressed his condolences to the late music composer Deva, saying that the memories of spending time with you will never leave my mind.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments