முகப்பு

அமெரிக்கன் ஆனியன் சூப்

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கொடுத்த அனைத்துப் பொருள்களையும் மூன்று கிண்ணம் நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அந்த தண்ணீரை சூப்புக்கு உபயோகிக்கவும்.

28 நவம்பர் 2026, 10:02 pm
அமெரிக்கன் ஆனியன் சூப்
அமெரிக்கன் ஆனியன் சூப்
பகிர்:

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 4

உப்பு - தேவையான அளவு

Advertisement

Advertisement

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

சீஸ் - கால் கிண்ணம்

மஞ்சள் - கால் தேக்கரண்டி

கடுகு (ஊற வைத்து அரைத்தது) -

1 தேக்கரண்டி

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய தேவையானவை:

தக்காளி - 2

கேரட் - 1

பொடியாக அரிந்த பீன்ஸ், செலரி- தலா கால் கிண்ணம்

செய்முறை:

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கொடுத்த அனைத்துப் பொருள்களையும் மூன்று கிண்ணம் நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அந்த தண்ணீரை சூப்புக்கு உபயோகிக்கவும். இதுதான் வெஜிடபிள் ஸ்டாக்.

ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி வெண்ணெயை போட்டு லேசாக உருக ஆரம்பித்ததும் மெலிதாக நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், கடுகு அரைத்த விழுது சேர்த்து வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி இரண்டு கொதி வந்ததும் சீஸ் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.