திரையிலும் நிஜத்திலும்... தில்லி ராவண வதத்தில் யாமி கௌதம்!
பாலிவுட் நடிகை யாமி கௌதம் ராம்லீலா திடலில் ராவண வதத்தில் ஈடுபடவிருப்பது குறித்து...
பாலிவுட் நடிகை யாமி கௌதம் ராம்லீலா திடலில் இன்று (அக்.20) ராவண வதம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சமீபத்தில் வெளியான அவரது படத்திலும் இந்தக் காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை யாமி கௌதம் தமிழில் கௌரவம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார்.
துரந்தர் படத்தின் இயக்குநரை மணந்த யாமி கௌதம் பாலிவுட்டில் தனக்கென புதிய ரசிகர்களை உருவாக்கியுள்ளார். அவரது ஆர்டிகிள் 370, முத்தலாக் பற்றிய படங்கள் மிகுந்த சர்ச்சையையும் வரவேற்பையும் பெற்றன.
Advertisement
Advertisement
யாமி கௌதம் நடிப்பில் ’நையி நவெல்லி' என்ற ஃபேன்டஸி திரைப்படம் வரும் அக்.16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மோகினியாக நடித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மோகினியாக நடித்திருக்கும் யாமி கௌதம் கடைசியில் ராவணனை வதைக்கும் காட்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், தில்லி செங்கோட்டையில் நடைபெறும் லவ் குஷா ராம்லீலா நிகழ்ச்சியில் யாமி கௌதம் பங்கேற்கவிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ராவணனின் உருவ பொம்மையை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் யாமி கௌதம் சுட்டு வீழ்த்தவிருக்கிறார். ராம்லீலாவின் கருவாக ‘பெண்களை மதிக்க வேண்டும்’ என உருவாக்கப்பட்டுள்ளது.
லவ் குஷா ராம்லீலா கமிட்டியின் தலைவர் அர்ஜுன் குமார், “தில்லி பெண்கள் மற்றும் நாட்டின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவம் படுத்தி, வலுவான கருத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தீமையை ஒழிப்பதில் ஆடவருக்கு நிகராக பெண்களுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கிறதை என்பதை மையப்படுத்தி இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நோக்கத்தில் யாமி கௌதமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த நிகழ்வுகளில் பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், அஜ்ய் தேவ்கன், ஜான் ஆப்ரஹாம், பிரபாஸ், கரீனா கபூர், ரோஹித் ஷெட்டி ஆகியோர் பங்கேற்றிருப்பதும் நினைவுகூரத்தக்கது.
Actor Yami Gautam to perform Ravan Vadh at Luv Kush Ramleela
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.