ராஜன் வகையறா புரோமோ எப்போது?
ராஜன் வகையறா புரோமோ குறித்து...
வெற்றி மாறன் இயக்கிவரும் ராஜன் வகையறா திரைப்படத்தின் புரோமோ விடியோ தயாராகி வருகிறதாம்.
இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரண்டும் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதை என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதில், அரசனில் நடிகர் சிலம்பரசனும் ராஜன் வகையறா திரைப்படத்தில் கென் கருணாஸையும் நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது.
Advertisement
Advertisement
ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதிய தகவலாக நடிகர் கென் நடித்து வரும் ராஜன் வகையறாவின் புரோமோவும் தயாராகி வருகிறதாம். இதனையும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The promo video for the film Rajan Vagiyaara, directed by Vetri Maran, is in the making.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.