FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐமேக்ஸில் மறுவெளியீடாகும் கிறிஸ்டோஃபர் நோலனின் தி பிரஸ்டீஜ்!

ஐமேக்ஸில் வெளியாகும் தி பிரஸ்டீஜ்....

பகிர்:

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய தி பிரஸ்டீஜ் திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் மீண்டும் வெளியாகவுள்ளது.

உலக அளவில் மிகப் பிரபலமான இயக்குநராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். தன் திரைப்படங்களின் வாயிலாகவே கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியவர். நோலனின் திரைப்படங்களுக்கு நோலன்தான் மிகப்பெரிய மார்க்கெட் ஆகவும் இருக்கிறார்.

இவர் இயக்கிய மொமெண்டோ (momento), இன்ஸப்ஷன் (inception), இண்டர்ஸ்டெல்லர் (intersteller) ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் இமாலய வரவேற்பைப் பெற்றன. இறுதியாக, நோலன் இயக்கிய தி ஒடிசியும் வசூலில் பெரிய சாதனையைச் செய்தது.

Advertisement

Advertisement

ஆனால், சினிமா மீது பெரிய ஆர்வம் கொண்ட ரசிகர்கள் பலருக்கும் நோலனின் மிகச்சிறந்த படைப்பு தி பிரஸ்டீஜ் (the prestige) திரைப்படம்தான் என்பதில் வலுவான நம்பிக்கை உண்டு.

இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கைக்குப் பின் இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதி ஐமேக்ஸ் திரைகளில் மறுவெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

The film The Prestige, directed by Christopher Nolan, will be released in IMAX screens.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments