அவெஞ்சர்ஸ்! 6 உண்மையான ரத்தினக் கற்களுடன் ரூ. 237 கோடி ஏலத்துக்கு வரும் கையுறை!
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் வரும் கையுறை மாதிரி ஏலத்துக்கு வருவது குறித்து...
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் வரும் கையுறை மாதிரி அபுதாபியில் ஏலத்துக்கு விடப்படுகிறது.
2018-ல் வெளியான மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் 6 ரத்தினக் கற்களுடன் கையுறை (Gauntlet) ஒன்று காட்டப்படும். 6 வெவ்வேறு சக்திகள் கொண்ட ரத்தினக் கற்களுடன் இருக்கும் கையுறையைப் பயன்படுத்தி, பாதி உலகையே வில்லன் அழிப்பதுபோல படத்தில் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தின் அடுத்த பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திலும் இந்த கையுறை காட்டப்பட்டிருக்கும்.
மார்வெல் நிறுவனத்தின் படங்களில் சுத்தி (தார்), கவசம் (கேப்டன் அமெரிக்கா), அயர்ன்மேனின் கவசம், சிலந்தி (ஸ்பைடர்மேன்), இரும்புக் கை (பகி) ஒவ்வொரு கதைநாயகனையும் ஒவ்வொரு பொருள் பிரதிபலிக்கும். இந்த வரிசையில் ரத்தினக் கற்களுடன் கூடிய கையுறையும் இருக்கும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் கையுறையைப் போல மாதிரி ஒன்று அபுதாபியில் டிசம்பர் 8 ஆம் தேதியில் ஏலத்துக்கு வருகிறது. மாணிக்கம், கோமேதகம், மரகதம், மஞ்சள் வைரம் என 6 உண்மையான ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் இந்த கையுறை மாதிரி, 25 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 237 கோடி) ஏலம் விடப்படுகிறது.
டிசம்பர் 8 ஆம் தேதியில் அபுதாபியில் கையுறை ஏலம் விடப்பட்டு, பின்னர் பஹ்ரைனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
Marvel's gem-studded Infinity Gauntlet replica heads to auction in Abu Dhabi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.