டேர் டெவிலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? ஆதிக் ரவிச்சந்திரன் பதில்!
டேர் டெவில் திரைப்பட நடிகர்கள் குறித்து....
டெர் டெவில் திரைப்படத்தின் நடிகர்கள் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து கார் பந்தயப் பயிற்சி மற்றும் போட்டிகளில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகமால் இருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டெர் டெவில் திரைப்படத்தின் பூஜை வருகிற நவ. 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் படப்பிடிப்பு தீபாவளி முடிந்து நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீலீலா, சுனில், பார்த்திபன், பிரபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளார்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் பாங்காக்கிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Adhik Ravichandran has spoken about the cast of the film Daredevil.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.