FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சொர்க்க பூமி... கிர்கிஸ்தானில் 341 கி.மீ. தூரம் மிதிவண்டி ஓட்டிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்த கிர்கிஸ்தான் மிதிவண்டி பயண அனுபவம் குறித்து...

1 செப்டம்பர் 2026, 8:35 pm IST
கிர்கிஸ்தானில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். - படங்கள்: இன்ஸ்டா / ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
பகிர்:

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் (35 வயது) கிர்கிஸ்தானில் 8 நாள்களில் 341 கி.மீ. தூரம் மிதிவண்டி ஓட்டிய பயண அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் மிக நீண்ட பதிவின் மூலம் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

கன்னடம் பேசும் தம்பதியினருக்கு ஜம்மு காஷ்மீரில் பிறந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல்முறையாக கோஹினூர் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். கன்னடத்தில் யு டர்ன் படத்தின் மூலம் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

தமிழில் காற்று வெளியிடை படத்தில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன் படத்தில் நாயகியாக நடித்தார். இவரது விக்ரம் வேதா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

Advertisement

கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் இறுகப்பற்று, கலியுகமாகிய படங்கள் வெளியாகின. ஆர்யன் படம் வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கிறது. ப்ரோ கோட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

பயணம் செய்வதில் விருப்பமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் கிர்கிஸ்தானில் மிதிவண்டியில் பயணம் செய்தேன். அதைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் ஒரு அழகான காட்சியைக் காணும்போது நான் ’ஃப்ரீக்கிங் ஹெல்!’ என்று முணுமுணுத்ததையும் ப்ரோகன் பிரைன் 'என்ன ஒரு சொர்க்கம்!' என்று மென்மையாக என்னைத் திருத்தியதையும் பற்றிப் பேச வேண்டுமா? ஆனால், அவர் கூறியதில் தவறில்லை.

அல்லது மலைப்பாங்கான, சரளைக் கற்கள் நிறைந்த சாலைகள் வழியாகவும் ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பாதைகள் வழியாகவும் செங்குத்தான பள்ளத்தாக்குகளில் இறங்கியும் ஓடைகளின் ஓரமாக, முடிவில்லாத ஆசியப் புல்வெளிகள் வழியாகவும் இன்று பட்டுப்பாதை என்று நன்கு அறியப்படும் அந்தப் புனிதமான தரையிலும் நான் மிதிவண்டியில் பயணித்ததைப் பற்றியா?

அல்லது சரியாகப் பேசத் தெரியாத, ஆனால் தன் சின்னஞ்சிறு கண்களால் காண முடிந்த ஒவ்வொரு குதிரைச் சாணத்தையும் சுட்டிக்காட்டி, ஒவ்வொன்றையும் அழுத்தமான ’பே’ என்ற சத்தத்துடன் அறிவித்த அந்த மூன்று வயது எமிரைப் பற்றியா?

அல்லது சூரியன் மறைவதற்குள் இளம் பதின்வயதுச் சிறுவர்கள் குதிரைகளில் சவாரி செய்வதையும் தங்கள் ஆடுகளை அவற்றின் தங்குமிடத்திற்குள் ஓட்டிச் செல்வதையும் நான் பார்த்ததைப் பற்றியா? அல்லது உலகின் மிக அற்புதமான பகுதிகளில் ஒன்றைக் கண்டேன் என்று இன்று நான் நம்புவதைப் பற்றியா?

தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த ஒரு சின்னப் பறவையுடன் நான் பந்தயத்தில் ஓடி, அதில் கண்ணியமாகத் தோற்ற அந்தத் தருணத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அல்லது குழந்தைப் பருவத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கைப்பிடியைப் பிடிக்காமல் மிதிவண்டியைச் சமநிலைப்படுத்தி ஓட்ட நான் மீண்டும் கற்றுக்கொண்டபோது, வெடித்துச் சிதறிவிடும் அளவுக்குப் பேரானந்தம் அடைந்ததைப் பற்றிச் சொல்கிறேன்.

அல்லது இதுபோன்ற அற்புதமான காட்சிகளைக்காணும் பாக்கியம் கிடைத்ததற்காகவும் வெறுமனே உயிருடன் இருப்பதற்காகவும் என் நாளின் ஒவ்வொரு கணமும் நான் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருந்ததைப் பற்றிச் சொல்கிறேன்.

மேலும், நாங்கள் கடந்து சென்ற ஒவ்வொருவரும் - சோவியத் யூனியன் காலத்துச் சத்தமிடும் லாரிகளில் வந்த கிராமவாசிகளாக இருந்தாலும் சரி, மூச்சிரைக்கச் சென்ற சக மிதிவண்டி ஓட்டுநர்களாக இருந்தாலும் சரி - தங்கள் அகன்ற புன்னகையை உதிர்த்து, கைகளை அசைத்து, தலையசைத்து, சில சமயங்களில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் கூறி எங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்கிறேன்.

அல்லது நான் சந்தித்த வேல்ஸைச் சேர்ந்த ஒரு பயணியைப் பற்றிச் சொல்கிறேன்; அவர், 'மைக்ரோவேவ்' என்பதற்கான வெல்ஷ் வார்த்தை 'பாப்பிடைப்பிங்' என்று என்னிடம் சொன்னார்.

அல்லது ஒரு நாள் இரவு, நாங்கள் இஸ்சிக் குல் அருகே முகாமிட்டிருந்தபோது, தஷ்டான் அட்டா தனது 70 வயது கரகரப்பான குரலில் எங்களுக்காகப் பழைய கிர்கிஸ் பாடல்களைப் பாடியதைப் பற்றிச் சொல்கிறேன். அது ஒரு கனவிலிருந்து வந்தது போலவே இருந்தது.

அல்லது ‘ஜாஷூ கெரெமெட்’ பற்றி - ’வாழ்க்கை அழகானது’ என்று சொல்லும் கிர்கிஸ் வழி அல்லது அந்தப் பயணம் முடிந்தபோது நான் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் கண்ணீர் சிந்தியதைப் பற்றி? 8 நாட்களில் 341 கிலோமீட்டர்.

அல்லது ஷில்பிலி கணவாய்க்குமுன் நாங்கள் முகாமிட்டிருந்த போது இரவு வானில் இருந்த நட்சத்திரங்களைப்போல, என் பயணத்தைப் பற்றி என்னிடம் முடிவற்ற கதைகள் உள்ளன.

நான் எங்கே தொடங்குவது? நீங்களே சொல்லுங்களேன் என்றார்.

summary

A paradise on earth... Shraddha Srinath cycled 341 km in Kyrgyzstan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments