நலமுடன் உள்ளேன்.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை வடிவுக்கரசி!
நான் நலமுடன் உள்ளேன் என்று புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை வடிவுக்கரசி...
யாரும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன் என்று தன்னைப் பற்றி வெளியான புரளிகளுக்கு நடிகை வடிவுக்கரசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒரு சில நாள்களாக நடிகை வடிவுக்கரசியின் உடல்நிலை குறித்து சில பொய்யான தகவல்கள் பரவி வந்தன. சிலர், நடிகை வடிவுக்கரசி இறந்துவிட்டார் என்றே வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் அவர் தான் நலமாக இருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
உண்மை தகவல் அறியாமல், அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் கவலை அடைந்தனர். எனவே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வடிவுக்கரவு, கவலைப்பட ஒன்றும் இல்லை. நான் நலமுடன் உள்ளேன். எந்த உடல்நலக் குறைவும் இல்லை.
Advertisement
Advertisement
தவறான தகவலால் கவலை அடைந்த சிலர், தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், என்னுடைய நலனை விரும்பிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருப்பவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.