ஹாய் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!
ஹாய் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது குறித்து...
ஹாய் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி செவ்வாய்க்கிழமை (செப். 1) வெளியிடப்பட்டது.
கவின் - நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஹாய்.
நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்த்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இன்று வெளியானது. இதில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர் கவின் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
A sneak peek of the movie 'Hi' was released on Tuesday (Sept. 1).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.