FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓடிடியில் விஷாலின் மகுடம் எப்போது?

மகுடம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

2 செப்டம்பர் 2026, 1:34 pm IST
மகுடம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் விஷால் நடித்த மகுடம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவான 'மகுடம்’ திரைப்படத்தை முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கினார். ஆனால், சில நாள்களிலேயே நடிகர் விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரவி அரசு அப்படத்திலிருந்து விலக, விஷாலே இயக்குநர் பணியையும் மேற்கொண்டார்.

நாயகிகளாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்ததால், மகுடம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், கடந்த ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், குறைந்த வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தில் ரெளடி தந்தை, அப்பாவி மகன் என இரட்டை வேடத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மகுடம் திரைப்படம் செப். 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information has emerged regarding the OTT release of the movie Magudam, starring actor Vishal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments