FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஷால் - துரை செந்தில்குமார் கூட்டணியில் புதிய திரைப்படம்?

நடிகர் விஷாலின் புதிய திரைப்படம் குறித்து...

3 செப்டம்பர் 2026, 4:53 pm IST
விஷால்
பகிர்:

நடிகர் விஷால் மீண்டும் ஆக்‌ஷன் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக தயாரான 'மகுடம்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமானார். மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விஷால் நடித்த இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.

இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் விஷாலின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறாராம்.

கடைசியாக துரை செந்தில்குமார் நடிகர் லெஜெண்ட் சரவணனை வைத்து லீடர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Reports indicate that actor Vishal is set to star in another action movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments